ரூபாய் மதிப்பில் நிலைத்தன்மை… முதலீட்டாளர்கள் கவனம்!

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் வர்த்தக வங்கிகள் அனைத்திலும் இன்று (27) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் நிலையாக உள்ளது; பெரும்பாலான வங்கிகளில் விற்பனை விகிதம் ரூ. 340 ஆக இருக்கிறது.
செய்லான் வங்கியின் தகவல்படி, அமெரிக்க டொலரின் வாங்கும் மற்றும் விற்கும் விலைகள் முறையே ரூ. 331.75 மற்றும் ரூ. 341.00 ஆகும்.
NDB வங்கியில், அமெரிக்கடொலரின் வாங்கும் விலை ரூ. 331.75 ஆகவும், விற்கும் விலை ரூ. 340.75 ஆகவும் உள்ளது.
பீப்பிள்ஸ் வங்கியில் அமெரிக்கடொலரின் வாங்கும் விலை ரூ. 331.81 ஆகவும், விற்கும் விலை ரூ. 340.63 ஆகவும் உள்ளது.
அமெரிக்க டொலரின் வாங்கும் விலை ரூ. 330.30 ஆகவும், விற்கும் விலை ரூ. 340.25 ஆகவும் இருப்பதாக கமர்ஷியல் வங்கி தெரிவிக்கிறது.
சம்பத் வங்கியில் அமெரிக்கடொலரின் வாங்கும் விலை ரூ. 332.25 ஆகவும், விற்கும் விலை ரூ. 340.25 ஆகவும் உள்ளது.




