தேவையான எரிபொருள் கையிருப்பில்…..

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது , சுகாதார சேவையைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு நாட்டில் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இரண்டு மாதங்களில் முழுமையாக எரிபொருள் தீர்ந்து போனாலும், அடுத்த ஆறு வாரங்களுக்கு சுகாதார சேவையை முன்னெடுத்துச் செல்வதற்கான பாதுகாப்பு கையிருப்பை (Buffer stock) நாம் களஞ்சியப்படுத்தியுள்ளோம்.
அத்துடன் துறைமுகம் மற்றும் விமான நிலையங்களுக்குத் தேவையான பாதுகாப்பு எரிபொருள் கையிருப்புகளைச் சேமித்து வைக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
நெருக்கடி தீவிரமடையாத பட்சத்தில், இந்த பாதுகாப்பு கையிருப்புகளைப் பாதுகாப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Follow & Share




