LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உள்ளூர்

சுவிஸ் அரசு, இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பிலும், தனது அக்கறையை விரிவுப்படுத்த வேண்டும்.

February 19, 2026 · Claude

காணி உரிமை, வீட்டுரிமை, அரசியல் உரிமை, கல்வி உரிமை, என்ற உரிமை அபிலாஷைகளை கோரிக்களை கொண்ட ஒரு தேசிய இனமாக மலையக மக்கள் வளர்ந்து விட்டார்கள். ஆனால், எமது அபிலாசைகளை, கூலி-தொழில் பிரச்சினையாக மட்டுமே சுருக்கி காட்டும் தந்திரத்தை இந்த அரசு லாவகமாக கையாள்கிறது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான தூதுக்குழுவுக்கும், சுவிட்சர்லாந்து தூதுவர் தலைமையிலான தூதுக்குழுவுக்கும் இடையில், கலந்துரையாடல் இடம்பெற்றது. மேலும் அவர்,

சுவிஸ் தூதர் சிரி வோல்டை சந்தித்து இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், தித்வா பேரழிவில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டு, மீள் கட்டமைப்பில் இன்று மிக அதிகமாக ஒதுக்கப்படும் அவலநிலையை பெருந்தோட்டங்களில் வாழும் மலையக தமிழர் எதிர் கொள்கிறார்கள் என, இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து தூதுவர் சிரி வோல்டிடம், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எடுத்து கூறியுள்ளார்.

இதன் போது மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இந்த பின்னணியில், சுவிஸ் அரசு, இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பிலும், தனது அக்கறையை விரிவு படுத்த வேண்டும்.

மலையக மக்களின் பரந்து பட்ட பிரச்சினைகளை தேசிய, சர்வதேசிய, தளங்களுக்கு கொண்டு வரும், அரசியல்-சிவில் உரையாடல் தளம் ஒன்றை ஏற்படுத்த, சுவிஸ் உதவிட வேண்டும்.

சுவிஸ் நல்லெண்ணம் எமது மக்களையும் வந்தடையும் வேளை வந்துவிட்டது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் நேரடி சந்திப்புக்கான பதில் கிடைக்கவில்லை. மலையகத் தமிழர் சமூகத்தின் சார்பில் அரசாங்கத்திடம், சுவிஸ் அரசு உறுதியாக எடுத்து கூற வேண்டும்.

பேரழிவு தேசிய அளவில் இருந்த போதிலும், உயிரிழப்புகளிலும் இடம் பெயர்விலும் தோட்ட தொழிலாளர் சமூகமே, அதிகமாக பாதிக்கப்பட்டது. தோட்ட காணிகளை கையக படுத்தி பெருந்தோட்ட தித்வா மக்களுக்கு வழங்க அவசர மற்றும் நில சட்டங்களின் கீழ் இலங்கைக்கு போதிய சட்ட அதிகாரம் உள்ளது. ஆனால் அரசுக்கு அதற்கான மனோதிடம் இல்லை.

மலையகத் தமிழர்கள் இனி தொழிலாளர் சமூகமாக மட்டும் அல்லாது, அரசியல், பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு உரிமை எதிர்பார்ப்புகளைக் கொண்ட இலங்கையின் ஒரு இன தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சமீபத்திய சந்திப்பில், கூறியபடி மலையக மக்களின் காணி உள்ளிட்ட உரிமைகளை ஐரோப்பிய ஒன்றிய ஜிஎஸ்பி ப்ளஸ் வரி சலுகைக்கான நிபந்தனைகளில் ஒன்றாக வேண்டும். இதற்கு சுவிஸ் உதவிட வேண்டும். இதையே நாம் பிரான்ஸிய தூதுவரையும் நேரில் சந்தித்து கோரினோம்.

இதில், ஜமமு இணை உபதலைவர் பாரத் அருள்சாமி, கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இமிதியாசான் நவாஸ் மற்றும் சுவிஸ் அரசியல் செயலாளர் ஜஸ்டின் பொய்லாட், அரசியல் அதிகாரி கணிஷ்கா ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

Explore More ›