LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உள்ளூர்

14 லட்சம் மில்லி லீட்டர் கோடா 50 ஆயிரம் மில்லி லீட்டர் கசிப்புடன் மூவர் கைது.

February 11, 2026 · Claude

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை களப்பு பகுதியை அண்டிய வாவியில் மறைத்து வைக்கப்பட்ட 14 இலட்சம் மில்லி லீட்டர் கோடா மற்றும் 50,000 மில்லி லீற்றர் கசிப்புடன் மூன்று சந்தேக நபர்களை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் மாலை ஆறு மணி முதல் நேற்று அதிகாலை ஆறு மணி வரை இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு விசேட பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது ஆரையம்பதியில் இருவர் மற்றும் மாவிலங்க துறையை சேர்ந்த ஒருவருமாக சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

14 இலட்சம் மில்லி லீற்றர் கோடா 50 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு கோடா பரல்கள், கசிப்பு வடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கலன்களும் மீட்கப்பட்டதாக மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் பொலிசார் தெரிவித்தனர்.

கைதான சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன. மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

Explore More ›