டயர் விற்பனை நிலையம் தீக்கிரை

தம்புள்ளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை – கண்டி வீதியிலுள்ள டயர் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று (20) திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
டயர் விற்பனை நிலையத்தின் உள்ளே ஆரம்பமான தீ, வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து பொலிஸார், மாநகர சபை, மின்சார சபை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து, அக்கம் பக்கத்திலுள்ள குடியிருப்பாளர்களைத் தெளிவுபடுத்தி, தீயைக் கட்டுப்படுத்துவதற்காகப் பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலுள்ள பல கடைகள் இந்தத் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Follow & Share




