‘சர்வதேச தொழிலாளர் தினம்’ இன்று

மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் “மே தினம்” தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. தொழிலாளர்களின் உரிமைகள், உழைப்பின் மதிப்பு மற்றும் சமூக நீதியை வலியுறுத்தும் நாளாக இது பார்க்கப்படுகிறது.
மே தினத்தின் வரலாறு 1886ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்களுடன் தொடர்புடையது. 8 மணி நேர வேலை நேரத்தை கோரி நடத்தப்பட்ட போராட்டங்களை நினைவுகூரும் வகையில் இந்த நாள் உலகளவில் கொண்டாடப்படுகிறது. இன்றும், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களின் குரலை வெளிப்படுத்தவும் மே தினம் ஒரு முக்கியமான நாளாகத் திகழ்கிறது.
Follow & Share




