இன்றைய வானிலை

இலங்கைக்கு வடக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் படிப்படியாகப் பலவீனமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், இத்தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன், மழையுடனான வானிலையும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். இப்பிரதேசங்களில் வானம் மேகமூட்டமாகக் காணப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Follow & Share




