இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

நாட்டின் பல பாகங்களில் இன்று மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை போன்ற மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். ஊவா, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு மேல் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், மணிக்கு 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் மற்றும் காற்றினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள பொதுமக்கள் முற்காப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Follow & Share




