இன்றைய காலநிலை

அயன அயல் மண்டல பிணைப்பு பிராந்தியம் நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் மே மாதம் 06 ஆம் திகதிக்குப் பிறகு நாட்டின் மழை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி, மாத்தறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
Follow & Share




