இன்றைய வானிலை நிலவரம்!

நாட்டின் சில பகுதிகளில் இன்று சிறியளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும். எனினும், மத்திய மலைநாடு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, மன்னார் மாவட்டங்களில் மணிக்கு 40 – 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
அதேவேளை, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு கடும் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பகல் வேளையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் போதியளவு நீர் அருந்துவதுடன், நீண்ட நேரம் வெயிலில் இருப்பதைத் தவிர்த்துத் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Follow & Share




