LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உள்ளூர்

மாசி சம்பலுடன் போதை மாத்திரைகளை கடத்தி வந்த மூவர் யாழில் கைது

November 26, 2025 · Claude

மாசி சம்பல் போத்தல்களுக்குள் மறைத்து வைத்து போதை மாத்திரைகளை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் கடத்தி வந்த மூவரை நேற்றைய தினம் யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் போதை மாத்திரை விற்பனை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மூவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது குறித்த நபர்கள் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மாசி, கருவாட்டு சம்பல் போத்தல்களை எடுத்து வந்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்த நிலையில், அவ்வாறு கொழும்பில் இருந்து மாசி சம்பல் போத்தல்களை எடுத்து வரும் போது அவற்றுக்குள் சூட்சுமமான முறையில் போதை மாத்திரைகளையும் கடத்தி வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Stories

Explore More ›