LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உள்ளூர்

நல்லூர் நினைவாலயம் நாளை மறுதினம் அங்குரார்பணம்

November 19, 2025 · Claude

தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு அங்குரார்பணம் செய்து வைக்கப்படும் என ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.

தாய் மண்ணுக்காக தம் உயிர்களை அர்பணித்தவர்களுடன், மாமனிதர்களையும், நாட்டுபற்றாளர்களையும் மற்றும் பல ஆவணப்படுத்தல்களையும் கொண்டு இம்முறை நல்லூர் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

தலைமுறைகள் கடந்து வாழும் எம் மாவீரச் செல்வங்களின் நினைவாலயத்திற்கு உங்கள் இளைய தலைமுறையினரையும் அழைத்து வந்து வரலாற்றினைக் கடத்துங்கள் மற்றும் உங்கள் மனப்பதிவுகளைப் பதிந்து விட்டுச் செல்லுங்கள் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

அதேவேளை நினைவாலயத்தை அமைக்கும் பணிகள் தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞரணியால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

யாழில் தொடரும் மழை காரணமாக நினைவாலயம் அமைக்கப்படும் பகுதிக்குள் வெள்ள நீர் உட்புகாத வகையில் , மண் மூடைகள் அடுக்கப்பட்டு , மண் நிரப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories

Explore More ›