இன்றைய வானிலை நிலவரம்

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை நேரத்தில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Follow & Share




