அதிக வெப்பம் குறித்து 7 மாகாணங்களுக்கு எச்சரிக்கை!

வளிமண்டளவியல் திணைக்களத்தினால் நிலவும் வெப்பமான காலநிலை குறித்து எச்சரிக்கை அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
அந்த திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் பற்றிய முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தினால் இன்று (18) வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, நாளை (19) வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல், சப்ரகமுவ, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பம் “கவனம் செலுத்த வேண்டிய” மட்டத்தில் இருக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, இது குறித்து அவதானம் செலுத்தி, ஆரோக்கியத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Follow & Share




