LATEST
ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்! அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்! அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்!
உள்ளூர்

போக்குவரத்து விதிமீறல்களுக்கு புகார் அளிக்க விசேட WhatsApp இலக்கம் அறிமுகம்!

April 11, 2026 · Claude

புத்தாண்டு காலப்பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவிற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் (DIG) டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிப்பதற்காக விசேட வட்ஸ்அப் இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய 070 4755600 என்ற வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமக்குத் தென்படும் போக்குவரத்து விதிமீறல்களை காணெளியாக பதிவு செய்து இந்த இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.

புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு இன்று முதல் இந்த விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கும், பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துவதற்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

சாரதிகள் மதுபோதையில் வாகனம் செலுத்தல் , அதிக வேகம் மற்றும் அபாயகரமான முறையில் முந்திச் செல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

Explore More ›