LATEST
ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்! அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்! அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்!
உள்ளூர்

அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

July 2, 2026 · National Tamil LK

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் நாடாளுமன்றப் பதவித் தகைமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள தகுதிவினா மனு மீதான விவாதங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக, மேன்முறையீட்டு நீதிமன்றம் 2026 ஆகஸ்ட் 31 ஆம் திகதியை நிர்ணயித்துள்ளது.
இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதிலும், நீதியரசர்கள் குழாம்முழுமையாக அமையாததன் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.
அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவரான ஓஷல ஹேரத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும்போது இன்னும் அரசாங்க மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கப் பதவியிலிருந்து முதலில் ராஜினாமா செய்யாமல் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வது நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தை மீறும் செயலாகும் என்று வாதிடும் மனுதாரர், அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்க சட்டப்பூர்வமாக தகுதியற்றவர் என அறிவிக்குமாறு கோரியுள்ளார்.
இந்த விவகாரத்தை சாத்தியமான அளவு ஆரம்பத் திகதி ஒன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மனுதாரரின் சட்டத்தரணி விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, நீதிமன்றம் இந்த வழக்கை ஆகஸ்ட் 31 ஆம் திகதி விவாதத்திற்காக நிர்ணயித்துள்ளதுடன், அன்றைய தினத்தின் வழக்குப்பட்டியலில் இதற்கு முதலிடமும் வழங்கியுள்ளது.
மனுதாரர் சார்பில் சட்டத்தரணிகளான ஷெனல் பெர்னாண்டோவுடன் இணைந்து சட்டத்தரணி என்.கே.அஷோக்பரன் முன்னிலையானார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சார்பில் சட்டத்தரணி நிஷாதி விக்ரமசிங்கவுடன் இணைந்து சட்டத்தரணி சேனானி தயாரத்ன முன்னிலையானார். அரசுத் தரப்பு சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனோஹர ஜயசிங்க முன்னிலையானார்.

Related Stories

Explore More ›