அமெரிக்காவில் புதிய உச்சத்தை தொடும் பெற்றோல் விலை!

அமெரிக்காவில் தொடர்ந்து உயர்ந்து வரும் பெற்றோல் விலையால், அந்நாட்டு மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
அமெரிக்க ஆட்டோமொபைல் சங்கத்தின் தரவுகளின்படி, அமெரிக்காவில் ஒரு கொள்கலன் (3.8 லீற்றர்) பெற்றோலின் சராசரி விலை 4.39 டொலராக உயர்ந்துள்ளது. ஈரான் மோதல் தொடங்குவதற்கு முன்பு இந்த விலை 3 டொலருக்கும் குறைவாகவே இருந்தது.
ஈரானுடனான மோதல் காரணமாக உலகளாவிய மசகு எண்ணெய் விலை (பிரென்ட் மசகு எண்ணெய்) 100 டொலரைக் கடந்து, 126 டொலர் வரை உச்சத்தைத் தொட்டுள்ளது.
Follow & Share




