பேருந்து பயணிகளின் பாதுகாப்புக்காக அதிரடி திட்டம்!

பொதுப் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கான நடமாடும் போ#ப்பொருள் பரிசோதனைத் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேற்கு மாகாணத்தில் இதுவரை 5,242 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 239 பேர் போ#ப்பொருள் பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் கிளிஃபோர்ட் பெரேரா தெரிவித்தார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும், சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறினார்.
Follow & Share




