கோழிகளில் தொற்று இல்லை! பறவைக் காய்ச்சல் குறித்து அதிகாரிகள் அறிவிப்பு!

நாட்டில் முதன்முறையாக வலசை செல்லும் கடற்பறவை ஒன்றுக்கு கொடிய H5N1 பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, ஒரு நாட்டுப் பறவைக்கு இந்த நோய் தொற்றியுள்ளது.
வட தீவின் வைராபரா பகுதியில் காணப்பட்ட, உள்ளூரில் கஹு என்று அழைக்கப்படும் சதுப்புநிலப் பருந்து ஒன்றுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது என உயிரியல் பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரூ ஹோகார்ட் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
நியூசிலாந்து, வெலிங்டனுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பழுப்பு நிற ஸ்குவா பறவையின் மூலம், தனது முதல் உறுதிசெய்யப்பட்ட கண்டறிதலை புதன்கிழமை அன்று அறிவித்தது.
“ஒரு உள்ளூர் பறவைக்கு H5 பறவைக் காய்ச்சல் இருப்பது ஏமாற்றமளித்தாலும், இந்த வாரத் தொடக்கத்தில் நமது முதல் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இது எதிர்பாராதது அல்ல,” என்று ஹொகார்ட் கூறினார்.
இந்தப் பருந்து கடற்கரைக்குச் செல்லக்கூடும் – குறிப்பாக குளிர்காலத்தில் வேட்டையாடுவதற்காக. நோயுற்ற பறவைகளை வேட்டையாடுவதன் மூலமோ, உண்பதன் மூலமோ, அல்லது அவற்றின் உடல்களைத் தின்பதன் மூலமோ பருந்துகளுக்குப் பறவைக் காய்ச்சல் வரக்கூடும்.
கோழிகளில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்படவில்லை என்று அவர் கூறினார்.
பறக்க இயலாத தகாஹே மற்றும் ககாபோ உள்ளிட்ட, நாட்டின் மிகவும் அருகிவரும் ஐந்து இனங்களைச் சேர்ந்த 300 முக்கிய இனப்பெருக்கப் பறவைகளுக்கு சுகாதார அதிகாரிகள் தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்த மாதத் தொடக்கத்தில், ஆஸ்திரேலியா தனது உள்ளூர் கடற்பறவை ஒன்றில் இந்த நோயின் முதல் பாதிப்பைப் பதிவு செய்தது. இதற்கு முந்தைய பாதிப்புகள் அனைத்தும் வலசைப் பறவைகளிடமே காணப்பட்டன.




