LATEST
ஹிருணிகா வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு! எசல பெரஹரவுக்காக கண்டியில் விசேட பாதுகாப்புத் திட்டம்! நெல் கொள்வனவில் அம்பாறை, மட்டக்களப்பு முன்னிலை! தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி – விலை மீண்டும் உயர்வு! பாதுகாப்பை உடைத்து பல கோடி ஓவியங்கள் கொள்ளை! முதல் இன்னிங்ஸில் இந்தியா 462 ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பு! கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் துயரச் சம்பவம்! வானிலையில் மாற்றம் – மழை மற்றும் பலத்த காற்றுக்கு எச்சரிக்கை! ஹிருணிகா வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு! எசல பெரஹரவுக்காக கண்டியில் விசேட பாதுகாப்புத் திட்டம்! நெல் கொள்வனவில் அம்பாறை, மட்டக்களப்பு முன்னிலை! தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி – விலை மீண்டும் உயர்வு! பாதுகாப்பை உடைத்து பல கோடி ஓவியங்கள் கொள்ளை! முதல் இன்னிங்ஸில் இந்தியா 462 ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பு! கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் துயரச் சம்பவம்! வானிலையில் மாற்றம் – மழை மற்றும் பலத்த காற்றுக்கு எச்சரிக்கை!
உலகம்

பாதுகாப்பை உடைத்து பல கோடி ஓவியங்கள் கொள்ளை!

August 17, 2026 · National Tamil LK

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்த சுமார் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 அபூர்வ ஓவியங்கள் திருடப்பட்டுள்ளன. 

நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. 

அருங்காட்சியகத்தில் பாதுகாவலர்கள் இருந்தபோதும், பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை அலார அமைப்புகளை முறியடித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பாதுகாக்கப்பட்ட கண்ணாடி பெட்டியை உடைத்து குறித்த 4 ஓவியங்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

தப்பியோடும் அவசரத்தில் 2 ஓவியங்களை அங்கேயே போட்டு விட்டுச் சென்றுள்ளனர். 

இந்த ஓவியங்களின் திருட்டு குறித்து இத்தாலி பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

Explore More ›