LATEST
தேடப்பட்ட ‘பஸ் லலித்’ சிக்கினார் – விசாரணைகள் ஆரம்பம்! இலஞ்ச  குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் தொழில்நுட்ப அதிகாரி விடுவிப்பு! சில பகுதிகளில் 75 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழை! இடியுடன் கூடிய மழை – முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல் நாட்டில் மீண்டும் தீவிரமடையும் டெங்கு அபாயம்! கப்பல்களுக்கு சேவைக் கட்டணம் – ஈரான் புதிய சட்ட முன்மொழிவு! இலங்கையில் ஏன் இந்த சந்திர கிரகணத்தை காண முடியாது? அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் மேலும் வலுப்பெற்றது! தேடப்பட்ட ‘பஸ் லலித்’ சிக்கினார் – விசாரணைகள் ஆரம்பம்! இலஞ்ச  குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் தொழில்நுட்ப அதிகாரி விடுவிப்பு! சில பகுதிகளில் 75 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழை! இடியுடன் கூடிய மழை – முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல் நாட்டில் மீண்டும் தீவிரமடையும் டெங்கு அபாயம்! கப்பல்களுக்கு சேவைக் கட்டணம் – ஈரான் புதிய சட்ட முன்மொழிவு! இலங்கையில் ஏன் இந்த சந்திர கிரகணத்தை காண முடியாது? அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் மேலும் வலுப்பெற்றது!
உள்ளூர்

இடியுடன் கூடிய மழை – முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்

August 25, 2026 · National Tamil LK

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அனுராதபுரம், மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப் படுகின்றது.


மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.  

Related Stories

Explore More ›