LATEST
ஆணைக்குழுவின் அழைப்பைத் தொடர்ந்து நாமல் ஆஜர்! நாமல் ராஜபக்ஷ இன்று ஆணைக்குழுவில் முன்னிலை! 50 மி.மீ.க்கும் அதிகமான மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்! நிலக்கரி கப்பல்கள் வந்ததும் மின் உற்பத்தி சீராகும்! கெஹல்பத்தர பத்மேவுக்கு மீண்டும் விளக்கமறியல்! ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட தரப்பினரின் 14 மனுக்கள் விசாரணைக்கு! பிரதமர் ஹரிணியின் பூட்டான் விஜயத்தில் முக்கிய சந்திப்பு! ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்றமா? ஆணைக்குழுவின் அழைப்பைத் தொடர்ந்து நாமல் ஆஜர்! நாமல் ராஜபக்ஷ இன்று ஆணைக்குழுவில் முன்னிலை! 50 மி.மீ.க்கும் அதிகமான மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்! நிலக்கரி கப்பல்கள் வந்ததும் மின் உற்பத்தி சீராகும்! கெஹல்பத்தர பத்மேவுக்கு மீண்டும் விளக்கமறியல்! ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட தரப்பினரின் 14 மனுக்கள் விசாரணைக்கு! பிரதமர் ஹரிணியின் பூட்டான் விஜயத்தில் முக்கிய சந்திப்பு! ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்றமா?
உள்ளூர்

எல்-நினோவால் 6 மாவட்டங்கள் பாதிப்பு!

September 3, 2026 · National Tamil LK

எல்-நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் 4ஆவது கூட்டம் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 

எல்-நினோ தாக்கம் காரணமாக வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து இதன் போது விசேடமாக கவனம் செலுத்தப்பட்டது. 

எல்-நினோ காலநிலை காரணமாக மரக்கறி மற்றும் பழச்செய்கைகளுக்கு ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைப்பது தொடர்பிலும், நாட்டில் மரக்கறித் தட்டுப்பாடு ஏற்படாதவாறு பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. 

இதுவரை 6 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் எல்-நினோ தாக்கத்திற்கு ஆளாகியுள்ளதால், அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையை வழமைபோல் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான தடையற்ற நீர் விநியோகத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களின் முன்னேற்றமும் மீளாய்வு செய்யப்பட்டது. 

பெரும்போகத்தை ஆரம்பிப்பது தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை செப்டம்பர் 4 ஆம் திகதி நடத்துவதற்கும், எல்-நினோ தாக்கத்திற்குள்ளாகியுள்ள ஆறு மாவட்டங்களின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் ‘சூம்’ தொழில்நுட்ப ஊடாக கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதுடன், செப்டம்பர் 14 ஆம் திகதி உபகுழு மீண்டும் கூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

Related Stories

Explore More ›