LATEST
எண்ணெய் விநியோக அச்சம்; விலை வேகமாக உயர்வு! பொலிஸ் உளவாளியை கொல்ல போலி பொலிஸ் ஜீப்! இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை பயணத்தில் முக்கிய உடன்படிக்கைகள்! கொழும்பு மராத்தான் 2026: 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! இஸ்ரேலிய குடியேற்றப் பொருட்களுக்கு மூன்று நாடுகள் தடை! அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம்! பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு! டிட்வா பேரழிவால் பாதிக்கப்பட்ட தொழில்முயற்சியாளர்களுக்கு புதிய கடன் திட்டம்! எண்ணெய் விநியோக அச்சம்; விலை வேகமாக உயர்வு! பொலிஸ் உளவாளியை கொல்ல போலி பொலிஸ் ஜீப்! இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை பயணத்தில் முக்கிய உடன்படிக்கைகள்! கொழும்பு மராத்தான் 2026: 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! இஸ்ரேலிய குடியேற்றப் பொருட்களுக்கு மூன்று நாடுகள் தடை! அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம்! பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு! டிட்வா பேரழிவால் பாதிக்கப்பட்ட தொழில்முயற்சியாளர்களுக்கு புதிய கடன் திட்டம்!
உள்ளூர்

டிட்வா பேரழிவால் பாதிக்கப்பட்ட தொழில்முயற்சியாளர்களுக்கு புதிய கடன் திட்டம்!

September 8, 2026 · National Tamil LK

அண்மைய டிட்வா பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித் துறையை மீளவும் முனைப்பாக ஆரம்பிப்பதற்கு கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இதற்கமைய, ‘மீள ஆரம்பிப்பதற்கான கடன் திட்டம்’ (RE – MSME Disaster Relief) மற்றும் ‘மீளமைத்தலுக்கான கடன் திட்டம்’ (EDR) ஆகிய இரண்டு கடன் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இந்தக் கடன் திட்டங்களை 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்துவதற்காக 10,000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

நாட்டின் பொருளாதாரத்தை விரைவாக மீட்சியடையச் செய்யும் நோக்கில் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தக் கடன் திட்டங்கள் திருத்தப்பட்டுத் தீவிரமாகச் செயற்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, 15 பங்காளி நிதி நிறுவனங்களின் உதவியுடன், டிட்வா பேரழிவினால் பாதிக்கப்பட்ட 3,968 தொழில்முயற்சியாளர்களுக்கு 8,061.4 மில்லியன் ரூபாய்களை வழங்குவதற்குக் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கடன் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த தகவல்களை அமைச்சரவை கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது.

Related Stories

Explore More ›