அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று (09) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.
பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண தற்போதைய அரசு தவறியதன் காரணமாக இந்த வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணக் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், இதுவரை சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்று கூட்டமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
தங்களது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால், இன்று தொடங்கிய தொழிற்சங்கப் போராட்டத்தைத் தொடர் வேலைநிறுத்தமாக மாற்ற வேண்டியிருக்கும்
என ஆசிரியர் கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது .
Follow & Share




