LATEST
இலங்கையின் 30% வீதி விபத்துகளுக்கு வீதிநாய்கள் காரணம் – கால்நடை மருத்துவர்கள் மூன்று மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு விழிப்புணர்வு அறிவித்தல்! ஆசிய விளையாட்டில் வடகொரிய மகளிர் அணியின் அபார தொடக்கம்! 2027 முதல் O/L தேர்வு 7 பாடங்களுக்கு மட்டுப்படுத்தும் புதிய கல்வி சீர்திருத்தம் அமலுக்கு! அபிவிருத்தி உரிமையை உலகம் சமமாக ஏற்க வேண்டும் – ஐ.நாவில் இலங்கை அழைப்பு! AI விவகாரத்தில் போட்டியை விட ஒத்துழைப்பு அவசியம் – அமெரிக்காவுக்கு சீனா கடும் பதில்! பலத்த மழை, காற்று, மின்னல் – மக்களுக்கு எச்சரிக்கை! மாத இறுதியில் எரிபொருள் விலை திருத்தம் சாத்தியம் – அமைச்சர் அனுர கருணாதிலக்க இலங்கையின் 30% வீதி விபத்துகளுக்கு வீதிநாய்கள் காரணம் – கால்நடை மருத்துவர்கள் மூன்று மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு விழிப்புணர்வு அறிவித்தல்! ஆசிய விளையாட்டில் வடகொரிய மகளிர் அணியின் அபார தொடக்கம்! 2027 முதல் O/L தேர்வு 7 பாடங்களுக்கு மட்டுப்படுத்தும் புதிய கல்வி சீர்திருத்தம் அமலுக்கு! அபிவிருத்தி உரிமையை உலகம் சமமாக ஏற்க வேண்டும் – ஐ.நாவில் இலங்கை அழைப்பு! AI விவகாரத்தில் போட்டியை விட ஒத்துழைப்பு அவசியம் – அமெரிக்காவுக்கு சீனா கடும் பதில்! பலத்த மழை, காற்று, மின்னல் – மக்களுக்கு எச்சரிக்கை! மாத இறுதியில் எரிபொருள் விலை திருத்தம் சாத்தியம் – அமைச்சர் அனுர கருணாதிலக்க
உள்ளூர்

இலங்கையின் 30% வீதி விபத்துகளுக்கு வீதிநாய்கள் காரணம் – கால்நடை மருத்துவர்கள்

September 15, 2026 · National Tamil LK

இலங்கையில் இடம்பெறும் வீதி விபத்துகளில் சுமார் 30 சதவீதமானவை வீதிகளில் வசிக்கும் நாய்களாலேயே ஏற்படுகின்றன என்றும், நாய் கடியினால் பாதிக்கப்படும் மக்களுக்கு விசர்நாய் கடி நோய் தடுப்பூசி வழங்குவதற்காக ஆண்டுதோறும் சுமார் 1 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாகவும் விலங்கு தொகையை மனிதநேயத்துடன் முகாமைத்துவம் செய்வதற்கான கால்நடை மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அந்த அமைப்பின் நிறுவுனர் மருத்துவர் சமித் நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.

வேகமாக அதிகரித்து வரும் வீதிகளில் வசிக்கும் நாய்களின் எண்ணிக்கை நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும், பொதுமக்களின் வரிப்பணமே தடுப்பூசிகளுக்காக இவ்வாறு விரயமாகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வீதிகளில் நாய்கள் பெருகியதற்கு மனிதர்களின் பொறுப்பற்ற நடத்தைகளும், சமூகப் பொறுப்புக்கூறல் பற்றிய விழிப்புணர்வின்மையுமே பிரதான காரணங்களாகும்.

அத்துடன் முறையற்ற கழிவு முகாமைத்துவமும் தெருநாய்களுக்கு இலகுவாக உணவு கிடைக்க வழிவகுத்துள்ளது.

விலங்கு தொகை முகாமைத்துவம் தொடர்பான புதிய சட்டமூலத்தின் மூலம் இதற்கு நீண்டகால தீர்வை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய சட்டமூலத்தின் கீழ், உரிமையாளர்களைக் கொண்ட அனைத்து நாய்களும் சம்மந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் பதிவு செய்யப்பட வேண்டும். அதேவேளை, உரிமையாளரோ அல்லது பராமரிப்பாளரோ இல்லாத தெருநாய்களுக்கான பொறுப்பு அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களிடம் ஒப்படைக்கப்படும்.

அதன்படி, இவ்வாறான விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கருத்தடை சிகிச்சை செய்வதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என்றும், இதன்மூலம் வீதிகளில் வசிக்கும் விலங்குகள் பராமரிப்பின்றி கைவிடப்படாது என்றும் மருத்துவர் சமித் நாணயக்கார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Stories

Explore More ›