LATEST
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சொகுசு வாகன வழக்கு ஒக்டோபர் 28க்கு ஒத்திவைப்பு! இலங்கை–தாய்லாந்து உறவுகளை வலுப்படுத்த இணக்கம்; விசா விலக்கை விரைவுபடுத்த கவனம்! மக்காவை நோக்கி ஏவப்பட்டதாகக் கூறப்படும் ஹவுதி ட்ரோன் இடைமறித்து அழிப்பு! இலங்கையை வீழ்த்தி T20 தொடரில் 1-0 முன்னிலை பெற்ற இங்கிலாந்து! ஜப்பானில் புதிய சாதனை: 100 வயதை கடந்தோர் எண்ணிக்கை முதன்முறையாக 1 லட்சத்தை தாண்டியது செப்டம்பர் 24 FCID ஆஜர் – இன்று சிங்கப்பூர் பயணம்! வானிலை மாற்றம் – மழை தாக்கம் குறைந்தாலும் எச்சரிக்கை தொடர்கிறது! 2027 நிதி ஒதுக்கீட்டு மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில்! ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சொகுசு வாகன வழக்கு ஒக்டோபர் 28க்கு ஒத்திவைப்பு! இலங்கை–தாய்லாந்து உறவுகளை வலுப்படுத்த இணக்கம்; விசா விலக்கை விரைவுபடுத்த கவனம்! மக்காவை நோக்கி ஏவப்பட்டதாகக் கூறப்படும் ஹவுதி ட்ரோன் இடைமறித்து அழிப்பு! இலங்கையை வீழ்த்தி T20 தொடரில் 1-0 முன்னிலை பெற்ற இங்கிலாந்து! ஜப்பானில் புதிய சாதனை: 100 வயதை கடந்தோர் எண்ணிக்கை முதன்முறையாக 1 லட்சத்தை தாண்டியது செப்டம்பர் 24 FCID ஆஜர் – இன்று சிங்கப்பூர் பயணம்! வானிலை மாற்றம் – மழை தாக்கம் குறைந்தாலும் எச்சரிக்கை தொடர்கிறது! 2027 நிதி ஒதுக்கீட்டு மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில்!
உள்ளூர்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சொகுசு வாகன வழக்கு ஒக்டோபர் 28க்கு ஒத்திவைப்பு!

September 16, 2026 · National Tamil LK

சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனம் ஒன்றை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதவான் பசந்த அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெந்திஸ், இது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்கு என நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த வழக்கின் விசாரணையை இறுதித் தடவையாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி அழைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டார்.

Related Stories

Explore More ›