LATEST
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சொகுசு வாகன வழக்கு ஒக்டோபர் 28க்கு ஒத்திவைப்பு! இலங்கை–தாய்லாந்து உறவுகளை வலுப்படுத்த இணக்கம்; விசா விலக்கை விரைவுபடுத்த கவனம்! மக்காவை நோக்கி ஏவப்பட்டதாகக் கூறப்படும் ஹவுதி ட்ரோன் இடைமறித்து அழிப்பு! இலங்கையை வீழ்த்தி T20 தொடரில் 1-0 முன்னிலை பெற்ற இங்கிலாந்து! ஜப்பானில் புதிய சாதனை: 100 வயதை கடந்தோர் எண்ணிக்கை முதன்முறையாக 1 லட்சத்தை தாண்டியது செப்டம்பர் 24 FCID ஆஜர் – இன்று சிங்கப்பூர் பயணம்! வானிலை மாற்றம் – மழை தாக்கம் குறைந்தாலும் எச்சரிக்கை தொடர்கிறது! 2027 நிதி ஒதுக்கீட்டு மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில்! ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சொகுசு வாகன வழக்கு ஒக்டோபர் 28க்கு ஒத்திவைப்பு! இலங்கை–தாய்லாந்து உறவுகளை வலுப்படுத்த இணக்கம்; விசா விலக்கை விரைவுபடுத்த கவனம்! மக்காவை நோக்கி ஏவப்பட்டதாகக் கூறப்படும் ஹவுதி ட்ரோன் இடைமறித்து அழிப்பு! இலங்கையை வீழ்த்தி T20 தொடரில் 1-0 முன்னிலை பெற்ற இங்கிலாந்து! ஜப்பானில் புதிய சாதனை: 100 வயதை கடந்தோர் எண்ணிக்கை முதன்முறையாக 1 லட்சத்தை தாண்டியது செப்டம்பர் 24 FCID ஆஜர் – இன்று சிங்கப்பூர் பயணம்! வானிலை மாற்றம் – மழை தாக்கம் குறைந்தாலும் எச்சரிக்கை தொடர்கிறது! 2027 நிதி ஒதுக்கீட்டு மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில்!
விளையாட்டு

இலங்கையை வீழ்த்தி T20 தொடரில் 1-0 முன்னிலை பெற்ற இங்கிலாந்து!

September 16, 2026 · National Tamil LK

சவுத்தம்டனில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ஓட்டங்களை பெற்றது.

255 ஓட்டங்கள் என்ற கடின வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 19 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து அணியின் தலைவர் ஹெரி புரூக் 49 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள் மற்றும் 6 ஆறு ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் 114 ஓட்டங்களை விளாசினார்.

இவருடன் இணைப்பாட்டத்தில் இருந்த ஜோஸ் பட்லர் 44 பந்துகளில் 80 ஓட்டங்களை குவித்தார்.

இங்கிலாந்து தரப்பில் சோனி பேக்கர் 12 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே அதிகபட்சமாக 33 ஓட்டங்களை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் இங்கிலாந்து அணி 1-0 எனக் முன்னிலை பெற்றுள்ளது.

Related Stories

Explore More ›