சபலென்காவை வீழ்த்தி முதல் US Open பட்டத்தை கைப்பற்றிய ரைபாகினா!

நியூயார்க்கில் உள்ள ஆர்தர் ஆஷ் மைதானத்தில் நடைபெற்ற 2026 அமெரிக்க பகிரங்க மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் கஸகஸ்தானின் எலினா ரைபாகினா பெலாரஸின் அரினா சபலென்காவை வீழ்த்தி முதன்முறையாக செம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
இதன் மூலம், தொடர்ச்சியாக 3-வது முறையாக அமெரிக்க பகிரங்கப் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்க இருந்த சபலென்காவின் கனவை ரைபாகினா முறியடித்துள்ளார்.
எலினா ரைபாகினா 6-4 5-7 6-2 என்ற செட் கணக்கில் அரினா சபலென்காவை வீழ்த்தியுள்ளார்.
இது இது எலினா ரைபாகினாவின் முதலாவது அமெரிக்க பகிரங்க பட்டமாகும்.
அத்துடன் இது, ஒட்டுமொத்தமாக அவரது 3-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
முன்னதாக அவர் 2022 விம்பிள்டன் மற்றும் 2026 அவுஸ்திரேலியன் பகிரங்க பட்டங்களை வென்றுள்ளார்.
இந்தநிலையில் இந்த வெற்றியின் மூலம் உலக மகளிர் டென்னிஸ் தரவரிசையில் எலினா ரைபாகினா முதலிடத்தைப் பிடிக்கவுள்ளார்.




