அல்-ஹிலால், அல்-அஹ்லி, அல்-நஸர் – ஆசிய கிண்ணத்திற்கு கடும் போட்டி!

சவுதி அரேபியாவின் முன்னணி கழக அணிகள் ஆசிய செம்பியன்ஸ் லீக் (Asian Champions League) கால்பந்து தொடரின் புதிய பருவத்துக்கான ஆயத்தங்களைத் தொடங்கியுள்ளன.
இதில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல்-நஸர் அணி தனது வெற்றிகரமான பயணத்தை ஆரம்பிக்க உள்ளது.
கடந்த இரண்டு பருவங்களாக சவுதி ப்ரோ லீக் அணிகளே ஆசிய செம்பியன்ஸ் லீக் பட்டத்தைக் கைப்பற்றி வரும் நிலையில், தொடர்ச்சியாக 3 ஆவது முறையாக கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றன.
41 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ அல்-நஸர் அணிக்காக தனது முதல் ஆசிய செம்பியன்ஸ் லீக் பட்டத்தை வெல்ல இது ஒரு முக்கியமான வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் சவுதி கழக அணிகள் வெளிநாட்டு வீரர்களை ஈர்ப்பதற்காக 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக செலவிட்டுள்ளதால், இந்தத்தொடரில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நடப்புச் செம்பியனான அல்-அஹ்லி, நான்கு முறை செம்பியன் பட்டம் வென்ற அல்-ஹிலால் மற்றும் அல்-இத்திஹாத் போன்ற பலமான அணிகளும் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன.




