அதிக சூடான தேநீர், கோப்பி – புற்றுநோய் அபாயம் அதிகரிக்கலாம்!

அதிக சூடான தேநீர் மற்றும் கோப்பி உள்ளிட்ட பானங்களை தொடர்ந்து அருந்துவதால், உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம் என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வொன்று எச்சரித்துள்ளது.
சுமார் 65 பாகை செல்சியஸ் அல்லது அதற்கு மேற்பட்ட வெப்பநிலையில் உள்ள பானங்கள், உணவுக்குழாயின் உட்புற செல்களின் அடுக்கை சேதப்படுத்தக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, கொதிக்கும் சூட்டில் தேநீர், கோப்பி உள்ளிட்ட பானங்களை அருந்துவதைத் தவிர்த்து, அவை சற்று ஆறிய பின்னர் அருந்துவது பாதுகாப்பானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, மிகவும் சூடான பானங்களை தொடர்ந்து அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், அவற்றின் வெப்பநிலையில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Follow & Share




