சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு

நாட்டில் நிலவும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகச் சீர்குலைவு காரணமாக, சாம்பா மற்றும் கீரி சாம்பா அரிசி வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.ஊடக மாநாடு ஒன்றில் பங்கேற்றபோது அவர் இதை வெளிப்படுத்தினார்.
தற்போது அறுவடை காலமாக இருந்தாலும், சந்தையில் நிலவும் அரிசிப் பற்றாக்குறை குறித்து உணவுப் பாதுகாப்புக் குழுவிலும் தீவிர விவாதம் நடைபெற்று வருவதாக ஆணையர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய சூழ்நிலையைக் கட்டுப்படுத்தவும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கவும் எதிர்காலத்தில் அரசு அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Follow & Share




