LATEST
வீடு கட்டித் தருவதாக நம்பவைத்து பணம் வசூல் சந்தேக நபர் கைது! பகலை இருளாக்கிய முழு சூரிய கிரகணம்! வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் வலுப்பெற்றது! ஜூலை மாத வரி நிலுவைகள் குறித்து முக்கிய அறிவிப்பு! சபாநாயகர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு வந்த சமிந்த குலரத்ன! வறட்சி, அதிக வெப்பம், எல் நினோ வானிலை திணைக்களம் முக்கிய எச்சரிக்கை! இலங்கையை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல – இந்திய அணிக்கு எச்சரிக்கை! ஏற்றுமதி, முதலீட்டுக்கு இலங்கை வழங்கும் சிறப்புச் சலுகைகள்! வீடு கட்டித் தருவதாக நம்பவைத்து பணம் வசூல் சந்தேக நபர் கைது! பகலை இருளாக்கிய முழு சூரிய கிரகணம்! வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் வலுப்பெற்றது! ஜூலை மாத வரி நிலுவைகள் குறித்து முக்கிய அறிவிப்பு! சபாநாயகர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு வந்த சமிந்த குலரத்ன! வறட்சி, அதிக வெப்பம், எல் நினோ வானிலை திணைக்களம் முக்கிய எச்சரிக்கை! இலங்கையை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல – இந்திய அணிக்கு எச்சரிக்கை! ஏற்றுமதி, முதலீட்டுக்கு இலங்கை வழங்கும் சிறப்புச் சலுகைகள்!
பல்சுவை

பகலை இருளாக்கிய முழு சூரிய கிரகணம்!

August 13, 2026 · National Tamil LK

27 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பிய கண்டத்தில் நேற்று (12) முதல் முழு சூரிய கிரகணம் காணப்பட்டது. 

இதற்கு முன்னர் 1999 ஆம் ஆண்டில்தான் ஐரோப்பிய நிலப்பகுதியில் முழு சூரிய கிரகணம் தென்பட்டடிருக்கிறது. 

நேற்று மாலை வட ஸ்பெயின், ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, போர்ச்சுகலில் முழு சூரிய கிரகணம் தென்பட்டது. ரஷியாவின் வட பகுதியிலும் முழு கிரகணம் தெரிந்தது. 

ஐரோப்பாவின் பிற பகுதிகள், வடமேற்கு ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிகளில் பகுதியளவு சூரிய கிரகணம் தென்பட்டது. 

இந்த கிரகணத்தின் உச்சக்கட்டத்தின் போது, நிலவு சூரியனை முழுமையாக மறைத்த நிகழ்வு 2 நிமிடங்கள் 18 வினாடிகள் வரை நீடித்தது. அந்தச் சில நிமிடங்களில் பகல் நேரம் திடீரென மாலை நேர இருளாக மாறியது. 

உலகின் கோடிக்கணக்கான மக்கள் இந்த முழு சூரிய கிரகணத்தை நேரிலும் நேரலையிலும் கண்டு ரசித்தனர். நாசா இந்த நேரலையை ஒளிபரப்பியது. 

ஸ்பெயினில் சூரிய அஸ்தமன நேரத்தில் இந்த கிரகணம் நிகழ்ந்ததால், மற்ற இடங்களை விட மிக பார்க்க அழகாக இருந்தது. 

ஸ்பெயினில் மட்டும் சுமார் 60 லட்சம் மக்கள் இதைக் காண திரண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியாவில் கிரகணம் நிகழ்ந்த நேரத்தில் இரவாக இருந்ததாலும், இந்தியா இந்த கிரகணத்தின் நிழல் பாதையில் அமைந்திருக்கவில்லை என்பதாலும் இங்கிருந்து இந்த சூரிய கிரகணத்தை நம்மால் காண முடியவில்லை.

Related Stories

Explore More ›