LATEST
பக்தர்கள் வெள்ளத்தில் மாமாங்கேஸ்வரர் தேரோட்டம்! டெங்கு தாக்கம் கம்பஹா, கொழும்பில் அதிக பாதிப்பு! நிஸ்ஸங்க சேனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்! கொலம்பியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்! கணினி முடக்கம்: கடவுச்சீட்டு பணிகள் பாதிப்பு! நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை! மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் உயிரிழப்பு! புலமைப்பரிசில் பெறுபேறுகள் விரைவில் வெளியாகும்! பக்தர்கள் வெள்ளத்தில் மாமாங்கேஸ்வரர் தேரோட்டம்! டெங்கு தாக்கம் கம்பஹா, கொழும்பில் அதிக பாதிப்பு! நிஸ்ஸங்க சேனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்! கொலம்பியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்! கணினி முடக்கம்: கடவுச்சீட்டு பணிகள் பாதிப்பு! நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை! மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் உயிரிழப்பு! புலமைப்பரிசில் பெறுபேறுகள் விரைவில் வெளியாகும்!
உள்ளூர்

வான்பாயும் மட்டத்தை எட்டிய காசல்ரீ, மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்கள்!

August 10, 2026 · National Tamil LK

காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீரேந்து பகுதிகளில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, இன்று (10) காலை வேளையில் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்கள் வான்பாயும் மட்டத்தை எட்டியுள்ளதாக அந்நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர். 

காசல்ரீ நீர்த்தேக்கம் வான்பாயும் மட்டத்திற்கு 1.2 அடி வரை எட்டியுள்ளதுடன், அந்நீர்த்தேக்கத்திற்கு கடந்த 24 மணிநேரத்தில் 25 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

அதேபோல் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கம் வான்பாயும் மட்டத்திற்கு 3.4 அடி வரை எட்டியுள்ளதுடன், கடந்த 24 மணிநேரத்தில் 29 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்த்தேக்கப் பொறுப்பதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இந்த இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளதனைத் தொடர்ந்து கென்யோன், லக்ஷபான, நவலக்ஷபான, பொல்பிட்டிய மற்றும் விமலாசுரேந்திர மின் உற்பத்தி நிலையங்களில் உச்ச கொள்ளளவில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இதற்கிடையில், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வான் கதவுகள் திறக்கப்படும் சாத்தியக்கூறுகள் நிலவுவதால், மஸ்கெலியா ஓயா ஆற்றின் இருமருங்கிலும் வசிக்கும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

Related Stories

Explore More ›