இலங்கையில் டெங்கு மீண்டும் உச்சக்கட்டம்!

இந்த ஆண்டின் கடந்த சில மாதங்களில் பதிவான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 88,000 ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63-ஐ எட்டியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2,739 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு நோயாளிகளில் அதிகபட்ச எண்ணிக்கையான 21.27% கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 17,490 நோயாளிகளும், கண்டி மாவட்டத்தில் 6,195 நோயாளிகளும், மாத்தறை மாவட்டத்தில் 5,910 நோயாளிகளும், களுத்துறை மாவட்டத்தில் 5,753 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.
Follow & Share




