LATEST
சிலிண்டர் விலையில் புதிய மாற்றம்! பலத்த மழை, காற்று மற்றும் மின்னல் – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்! எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விசாரணையில் நாமல் கைது! 15 தரப்பினரின் மனுக்கள் மீது உயர்நீதிமன்ற விசாரணை நிறைவு! பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விலை குறைப்பு அறிவிப்பு! பல தலைமுறை பெண்களுக்கு ஊக்கமளித்த குளோரியா ஸ்டெய்னம் மறைவு! இலஞ்ச விசாரணையில் ஜோன்ஸ்டன் கைது! 281.39 ஸ்டிரைக் ரேட் – தசுனின் மிரட்டல் ஆட்டம்! சிலிண்டர் விலையில் புதிய மாற்றம்! பலத்த மழை, காற்று மற்றும் மின்னல் – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்! எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விசாரணையில் நாமல் கைது! 15 தரப்பினரின் மனுக்கள் மீது உயர்நீதிமன்ற விசாரணை நிறைவு! பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விலை குறைப்பு அறிவிப்பு! பல தலைமுறை பெண்களுக்கு ஊக்கமளித்த குளோரியா ஸ்டெய்னம் மறைவு! இலஞ்ச விசாரணையில் ஜோன்ஸ்டன் கைது! 281.39 ஸ்டிரைக் ரேட் – தசுனின் மிரட்டல் ஆட்டம்!
Breaking

15 தரப்பினரின் மனுக்கள் மீது உயர்நீதிமன்ற விசாரணை நிறைவு!

September 4, 2026 · National Tamil LK

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது. 

குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை பாராளுமன்ற சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பி வைப்பதாக அறிவித்துள்ளது. 

இச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி 15 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், அவை சிரான் குணரத்ன, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் இரண்டு நாட்களாக விசாரிக்கப்பட்டன. 

இன்று (04) வாய்மூல சமர்ப்பணங்களை நிறைவு செய்த உயர் நீதிமன்றம், எழுத்துமூலச் சமர்ப்பணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை திங்கட்கிழமை பிற்பகல் 12.00 மணிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு தரப்பினருக்கு உத்தரவிட்டது. 

அதனைத் தொடர்ந்து, இச்சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்த உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் பாராளுமன்ற சபாநாயகருக்கு எதிர்காலத்தில் அனுப்பி வைப்பதாகவும் நீதியரசர் குழாம் அறிவித்தது. 

குறித்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மீடியா லோ போரம் (Media Law Forum), ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீ லங்கா (Transparency International Sri Lanka) அமைப்பு உள்ளிட்ட 15 தரப்பினர் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

Related Stories

Explore More ›