பாராளுமன்றத்தில் புதிய மோதல்!

பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா அமர்ந்திருக்கும் இருக்கையால், தமக்கு தொடர்ந்து கவனச்சிதறல் ஏற்படுவதாகக் கூறி, தனது இருக்கையை மாற்றுமாறு சபாநாயகரிடம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமல்லாமல், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும், சமூக ஊடகங்களிலும் தம்மை பகிரங்கமாக அவமதித்து வருவதாகவும், வன்முறையால் அச்சுறுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு தற்போது அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
இதேவேளை, இந்த தகவல் குறித்து இதுவரை சபாநாயகர் தரப்பிலோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா தரப்பிலோ உத்தியோகபூர்வ பதில் எதுவும் வெளியாகவில்லை.




