LATEST
சுரேஷ் சலேவின் மருத்துவ நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு! மக்கள் மீதான வரிச்சுமை குறைக்க நடவடிக்கை தேவை! iPhone 18 Pro அறிமுகம், முன்பதிவு, விற்பனை தேதிகள் வெளியீடு! நாளை இரவு 8 மணி முதல் நீர்வெட்டு – மக்களுக்கு அறிவிப்பு! நாளை இரவு 8 மணி முதல் 24 மணி நேர நீர் விநியோகம் தடை! பிரித்தானிய பரிமாற்றச் சாதனையை சமன் செய்த என்சோ ஒப்பந்தம்! வெளிநாட்டுக் கடன் அதிகரித்ததாக கூறுவது தவறு – பிரதி அமைச்சர் மில்டன் பெரேராவின் மகன் பிரியங்கர பெரேரா காலமானார்! சுரேஷ் சலேவின் மருத்துவ நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு! மக்கள் மீதான வரிச்சுமை குறைக்க நடவடிக்கை தேவை! iPhone 18 Pro அறிமுகம், முன்பதிவு, விற்பனை தேதிகள் வெளியீடு! நாளை இரவு 8 மணி முதல் நீர்வெட்டு – மக்களுக்கு அறிவிப்பு! நாளை இரவு 8 மணி முதல் 24 மணி நேர நீர் விநியோகம் தடை! பிரித்தானிய பரிமாற்றச் சாதனையை சமன் செய்த என்சோ ஒப்பந்தம்! வெளிநாட்டுக் கடன் அதிகரித்ததாக கூறுவது தவறு – பிரதி அமைச்சர் மில்டன் பெரேராவின் மகன் பிரியங்கர பெரேரா காலமானார்!
உள்ளூர்

நாளை இரவு 8 மணி முதல் நீர்வெட்டு – மக்களுக்கு அறிவிப்பு!

September 2, 2026 · National Tamil LK

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் நாளை (03) முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாகவே, நாளை இரவு 8.00 மணி முதல் வெள்ளிக்கிழமை (04) இரவு 8.00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது. 

இதற்கமைய நுகேகொடை, கொஹுவலை, தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை, மொறட்டுவை, ராவதாவத்தை, சொய்சாபுரம், அங்குலானை, இதிபெத்த, கடுபெத்த, கல்தெமுல்ல, மோதறை, கொரளவெல்ல, எகொடவுயன மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. 

அத்துடன், செத்சிறிபாய, ஹிம்புடான, உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கிச் சந்தி வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை வீதி, ஜெயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளுக்கும் இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீர் விநியோகம் நிறுத்தப்படுவதால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, குறிப்பிட்ட காலப்பகுதியில் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories

Explore More ›