லெபனான் துப்பாக்கிச் சூட்டில் அமைதிப்படை வீரர் கொல்லப்பட்டார்

தெற்கு லெபனானில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஐ.நா. அமைதிப்படையினரைக் குறிவைத்து துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்தத் தாக்குதலில் ஒரு அமைதிப்படை வீரர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.அவர் ஒரு பிரெஞ்சு சிப்பாய் என்றும் கூறப்படுகிறது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மேலும் மூன்று வீரர்கள் காயமடைந்தனர், அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லாவே காரணம் என்று பிரெஞ்சு அதிபர் குற்றம் சாட்டிய போதிலும், தங்களுக்கு இந்தத் தாக்குதலுடன் எந்தத் தொடர்பும் இல்லை என ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 16ஆம் தேதி முதல் 10 நாள் போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
Follow & Share




