கைதிகள் மோதல் தீவிரம்… குருவிட்டா சிறையில் அவசர நிலை!

குருவிட்டா சிறையில் வெள்ளிக்கிழமை அன்று கைதிகள் குழுவினரிடையே கலவரம் வெடித்ததாகவும், பதற்றம் அதிகரித்ததை அடுத்து நிலைமையைச் சீரமைக்க அதிகாரிகள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதாகவும் சிறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த மேலும் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை இரவு தொடங்கிய ஆரம்பகட்டக் கலவரம் சிறை அதிகாரிகளால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, ஆனால் வெள்ளிக்கிழமை காலை மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டது.
கலவரத்தின் போது கைதிகள் குழு ஒன்று சிறை மருத்துவமனையை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
நிலைமையைக் கட்டுப்படுத்தவும், அந்த வளாகத்திற்குள் அமைதியை நிலைநாட்டவும் அதிகாரிகள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.
Follow & Share




