LATEST
60–70 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று… கடலுக்குச் செல்ல வேண்டாம்! அரசுக்கு எதிராக கைகோர்க்கும் எதிர்க்கட்சிகள்! முக்கிய முடிவு விரைவில் இலங்கையில் டெங்கு மீண்டும் உச்சக்கட்டம்! பல்கலைக்கழக அனுமதிப் பதிவு ஆரம்பம்! இலங்கையின் அரசியல் தீர்வு குறித்து இந்தியா மீண்டும் குரல்! பல மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய எச்சரிக்கை! வனவிலங்கு சுற்றுலாவை உலகிற்கு அறிமுகப்படுத்திய இலங்கை காமன்வெல்த் தங்க வீரர் ரூமேஷ் தரங்காவுக்கு பதவி உயர்வு! 60–70 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று… கடலுக்குச் செல்ல வேண்டாம்! அரசுக்கு எதிராக கைகோர்க்கும் எதிர்க்கட்சிகள்! முக்கிய முடிவு விரைவில் இலங்கையில் டெங்கு மீண்டும் உச்சக்கட்டம்! பல்கலைக்கழக அனுமதிப் பதிவு ஆரம்பம்! இலங்கையின் அரசியல் தீர்வு குறித்து இந்தியா மீண்டும் குரல்! பல மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய எச்சரிக்கை! வனவிலங்கு சுற்றுலாவை உலகிற்கு அறிமுகப்படுத்திய இலங்கை காமன்வெல்த் தங்க வீரர் ரூமேஷ் தரங்காவுக்கு பதவி உயர்வு!
உள்ளூர்

60–70 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று… கடலுக்குச் செல்ல வேண்டாம்!

August 7, 2026 · National Tamil LK

சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

அத்துடன் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வடமத்திய, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இதேவேளை மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடற் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்க கூடிய வாய்ப்புள்ளது. 

மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடற் பிராந்தியங்கள் அவ்வப்போது கொந்தளிப்பாகவோ அல்லது மிகக் கொந்தளிப்பாகவோ காணப்படும். 

காங்கேசந்துறையில் இருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடற் பிராந்தியங்கள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். 

எனவே, இக்கடற் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

Explore More ›