இரு நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ரூ.124.5 மில்லியன் வருமானம்!

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) தகவல்படி, ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு பொது விடுமுறை நாட்களில் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் ரூ. 124.5 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன.
இரண்டு நாட்களில் 325,316 வாகனங்கள் விரைவுச்சாலை வலையமைப்பைப் பயன்படுத்தியதாக ஆர்.டி.ஏ. தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 26 அன்று, மொத்தம் 1,63,763 வாகனங்கள் பயணித்ததன் மூலம் ரூ. 60.4 மில்லியன் வருமானம் ஈட்டப்பட்டது.
மறுநாள், 161,553 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 64.1 மில்லியன் வருவாய் ஈட்டப்பட்டது.
தெற்கு விரைவுச்சாலை (E01) மற்றும் வெளிவட்ட விரைவுச்சாலை (E02) ஆகியவற்றில் அதிகபட்ச போக்குவரத்து அளவு பதிவாகியுள்ளதாக ஆர்.டி.ஏ. குறிப்பிட்டது
Follow & Share




