LATEST
மத்திய கிழக்கு பதற்றம் எண்ணெய் சந்தையை மீண்டும் உலுக்கியது! ஆசியக் கிண்ணம் வென்ற இந்தியா கிண்ணத்தை பெற மறுப்பு – பரிசளிப்பில் பெரும் சர்ச்சை! இன்றும் வானிலை மோசமடையும் வாய்ப்பு! ஜனநாயகத்தை காக்க செப்.24 போராட்டம் – சஜித் அறிவிப்பு! நெடுஞ்சாலை பாதுகாப்பில் புதிய கட்டுப்பாடு – ஆசனப்பட்டி கட்டாயம்! இலங்கை–தாய்லாந்து உறவுகளை வலுப்படுத்த விஜித ஹேரத் உத்தியோகபூர்வ விஜயம்! இலங்கையின் அந்நியச் செலாவணிக்கு பலம் சேர்க்கும் வெளிநாட்டு பணவரவு! AI அபாயங்களை சமாளிக்க அரசுகளும் நிறுவனங்களும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! மத்திய கிழக்கு பதற்றம் எண்ணெய் சந்தையை மீண்டும் உலுக்கியது! ஆசியக் கிண்ணம் வென்ற இந்தியா கிண்ணத்தை பெற மறுப்பு – பரிசளிப்பில் பெரும் சர்ச்சை! இன்றும் வானிலை மோசமடையும் வாய்ப்பு! ஜனநாயகத்தை காக்க செப்.24 போராட்டம் – சஜித் அறிவிப்பு! நெடுஞ்சாலை பாதுகாப்பில் புதிய கட்டுப்பாடு – ஆசனப்பட்டி கட்டாயம்! இலங்கை–தாய்லாந்து உறவுகளை வலுப்படுத்த விஜித ஹேரத் உத்தியோகபூர்வ விஜயம்! இலங்கையின் அந்நியச் செலாவணிக்கு பலம் சேர்க்கும் வெளிநாட்டு பணவரவு! AI அபாயங்களை சமாளிக்க அரசுகளும் நிறுவனங்களும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!
உலகம்

ஈரான் நகர்வால் உலக எண்ணெய் சந்தையில் அதிரடி மாற்றம்!

September 12, 2026 · National Tamil LK

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தொடர்ந்து உயர்ந்து வந்த உலக சந்தையின் கச்சா எண்ணெய் விலையில் சற்றே சரிவு பதிவாகியுள்ளது. 

உலக சந்தையின் முக்கிய எண்ணெய் விலை குறியீடான ப்ரென்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்று (11) காலை வேளையில் 108 அமெரிக்க ​டொலர்களைக் கடந்திருந்த நிலையில், அது இன்று 104.61 டொலராகக் குறைந்துள்ளது. 

இதற்கு இணையாக, அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் நேற்று பதிவான 103.34 டொலரில் இருந்து இன்று 100.05 டொலராகக் குறைந்துள்ளது. 

இது தவிர, மேர்பன் (Murban) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் நேற்று நிலவிய 122.48 டொலரில் இருந்து இன்றைய தினத்தில் 119.46 டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது. 

சுமார் ஒரு வார காலமாக நிலவி வரும் தீவிரமான போர் சூழலுக்கு மத்தியிலும், இவ்வாறு கச்சா எண்ணெய் விலைகள் சரிவடைவதற்குக் முதன்மைச் காரணியாக அமைந்தது ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) குறித்து விவாதிப்பதற்காக ஈரானிய அதிகாரிகள் குழுவொன்று ஓமன் நோக்கிப் புறப்படுவதாக ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்ட அறிவிப்பாகும். 

இந்த தீர்க்கமான பேச்சுவார்த்தையில் வளைகுடா பிராந்தியத்தைச் சேர்ந்த பல நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.

Related Stories

Explore More ›