எம்.சி.சி உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டமை இலங்கைக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்

480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் நிதியுதவி ரத்து செய்யப்பட்டமை காரணமாக இலங்கைக்கு பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளின் நேரடி முதலீடுகளில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

எம்.சி.சி நிதியுதவிக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கத் தவறியதால், முதலீட்டாளர்கள் பணச் சந்தைகளில் முதலீடு செய்வதிலிருந்து பின்வாங்கக்கூடும்.

முன்னணி பொருளாதார நிபுணர் டபிள்யூ.ஏ. விஜேவர்தனவின் கருத்துப்படி இந்த விடயம் முதலீட்டாளர்களுக்கு இடையில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சுமார் ஒரு மாதத்துக்கு முன்கே திறைசேரியின் பத்திரங்களுக்கு ஊடான வெளிநாட்டு முதலீடுகள் 14 பில்லியனில் இருந்து 7 பில்லியன்களாக குறைந்துவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே எம்.சி.சி முன்மொழிவை முற்றிலுமாக நிராகரிப்பதற்குப் பதிலாக இலங்கை நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

நிலத்தின் பெயர்களை டிஜிட்டல் மயமாக்குவது ஒரு திட்டமாகும் இது இலங்கைக்கு நன்மையைத்தரும் நீண்ட கால நடவடிக்கையாகும்.

2006 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அப்போதைய மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோர் எம்.சி.சி உதவியை பெற்றுக்கொள்ள முயன்றனர்.

எனினும் மனித உரிமை மீறல் காரணமாக அமெரிக்க அதிகாரிகளால் அதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்பதை முன்னணி பொருளாதார நிபுணர் டபிள்யூ.ஏ. விஜேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.