LATEST
செப்டம்பர் 30க்குள் முதியோர் இல்லங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்! இன்று அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் மதிப்பில் சிறிய மாற்றம்! ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்! அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு செப்டம்பர் 30க்குள் முதியோர் இல்லங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்! இன்று அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் மதிப்பில் சிறிய மாற்றம்! ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்! அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு
உலகம்

இந்தோனேசியாவில் மண்சரிவு : 11 பேர் பலி – 12 பேர் மாயம்

November 16, 2025 · Claude

இந்தோனேசியாவின், மத்திய ஜாவாவில் கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்தோனேசிய அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீட்புப் பணியாளர்கள் காணாமல் போன 12 பேரை தேடிவருகிறார்கள்.

கடந்த வியாழக்கிழமை சிலாகாப் நகரில் ஏற்பட்ட மண்சரிவில் சிபியூனிங் கிராமத்தில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன.

3 முதல் 8 மீட்டர் (10-25 அடி) ஆழத்தில் மக்கள் புதைந்திருந்ததால் மீட்புப் பணி சவாலானதாக மாறியுள்ளது.

நேற்று 3 பேரும் இன்று 8 பேருமாக 11 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காணாமல் போயுள்ளனர் என இந்தோனேசிய அனர்த்த முகாமைத்துவ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தென்கிழக்கு ஆசிய நாட்டில் மழைக்காலம் செம்டெம்பர் மாதம் ஆரம்பித்து ஏப்ரல் மாதம் வரை நீடிப்பதால் வெள்ளப்பெருக்கு மற்றும் அதிகளவான மழை பெய்யும் வானிலை அவதானம் நிலையம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் மத்திய ஜாவா நகரமான பெக்கலோங்கனில் பெய்த மழையால் ஏற்பட்ட மற்றொரு மண்சரிவில் சிக்கி சுமார் 25 பேர் உயிரிழந்தனர்.

Related Stories

Explore More ›