LATEST
செப்டம்பர் 30க்குள் முதியோர் இல்லங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்! இன்று அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் மதிப்பில் சிறிய மாற்றம்! ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்! அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு செப்டம்பர் 30க்குள் முதியோர் இல்லங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்! இன்று அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் மதிப்பில் சிறிய மாற்றம்! ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்! அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு
உள்ளூர்

தையிட்டியில் நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்திற்கு கஜேந்திரன் அழைப்பு

December 27, 2025 · Claude

எதிர்வரும் 3ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று தையிட்டியிலே வழமைப்போன்று நடைபெறுகின்ற போராட்டம் ஒரு மாபெரும் போராட்டமாக நடாத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் காணி உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டு இருக்கின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

குறித்த போராட்டத்திற்கு ஏனைய அரசியல் தரப்புக்களுக்கும் கலந்துக்கொள்ள வேண்டும் என்கின்ற கோரிக்கைகளும் குறித்த காணி உரிமையாளர்களால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

அந்த வகையிலே 03ஆம் திகதி நடைபெற இருக்கின்ற குறித்த போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களும் கட்சி பேதங்களை கடந்து உங்களுடைய நேரங்களை ஒதுக்கி அந்த போராட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த என்.பி.பி அரசாங்கம் ஏனைய அரசாங்கங்களை இனவாத அரசாங்கம் என்று கூறி அவர்கள் வந்த பாதை தவறான பாதை என்பதனால் தான் தமிழ் மக்கள் தமிழ் தேசிய வாதம் என்ற ஒரு நிலைப்பாட்டிற்குள் சென்றார்கள் என்றும் தாங்கள் எல்லோரையும் சமனாக மதித்து சட்டத்தின் ஆட்சியை எல்லோருக்கும் சமனாக நடைமுறைப்படுத்தி இனவாதம், மதவாதம் இல்லாத ஒரு ஆட்சியை நடைமுறைப்படுத்தினால் எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு நிலைமை உருவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

Explore More ›