LATEST
செப்டம்பர் 30க்குள் முதியோர் இல்லங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்! இன்று அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் மதிப்பில் சிறிய மாற்றம்! ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்! அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு செப்டம்பர் 30க்குள் முதியோர் இல்லங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்! இன்று அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் மதிப்பில் சிறிய மாற்றம்! ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்! அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு
உள்ளூர்

அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு தண்டப்பணம் விதிப்பு

January 24, 2026 · Claude

சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டு கைப்பற்றப்பட்ட 3 உழவு இயந்திரம் உட்பட மூவருக்கு ரூபா 1 இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதித்து சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறகர் பகுதியில் அனுமதி வழங்கப்படாத இடத்தில் மண் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கடந்த வியாழக்கிழமை(22) சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பொலிஸ் குழுவினரும் மல்வத்தை விசேட அதிரடிப்படையினரும் இணைந்து அப்பகுதியை சுற்றி வளைத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் போது மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தப்பி செல்வதற்காக உழவு இயந்திரத்துடன் வீதி வழியாக சென்ற போது குறித்த சோதனை நடவடிக்கையில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதுடன் 3 உழவு இயந்திரங்கள் உட்பட 3 சந்தேக நபர்களையும் மணலுடன் கைது செய்து சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.

பின்னர் இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட 3 உழவு இயந்திரத்தில் ஒரு உழவு இயந்திரம் மேல் விரிப்பு இன்றி ஏற்றப்பட்ட மணலை பாதுகாப்பு குறைபாட்டுடன் கொண்டு சென்றமையினால் கைப்பற்றப்பட்டதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் பொலிஸ் உயரதிகாரி குறிப்பிட்டார்.

Related Stories

Explore More ›