வாகன விபத்தில் சிறுமி ஒருவர் பலி

சிலாபம் – குருநாகல் வீதியின் மேல் கொஸ்வத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளர். நேற்று பிற்பகல் விபத்து இடம்பெற்றுள்ளது.
சிலாபம் நோக்கி பயணித்த லொறியொன்று வீதியில் நடந்து சென்ற சிறுமிகள் மீது மோதியுள்ளது. சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான சிறுமிகள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஹல்மில்லேவ பகுதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பிங்கிரிய பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Follow & Share




