பதவியில் இருந்து வடிவேல் சுரேஷ் நீக்கம்: சஜித் அதிரடி நடவடிக்கை

பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நீக்கப்பட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

வெற்றிடமான பதவி
இதன்படி வெற்றிடமான பசறை தொகுதி அமைப்பாளர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் லெட்சுமணன் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருந்து உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

உரிய பதவிக்கு தாம் நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைவதாகவும், பசறை இளைஞர்களுக்கு சேவையாற்றுவேன் என நம்புவதாகவும் லெட்சுமணன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.