புலம்பெயர் நாடுகளில் இலங்கை அரசால் செல்வி துவாரகாக்கு எதிராக இயக்கப்படும் நபர்கள் யார்.வெளியான அதிர்ச்சி தகவல்..!

புலம்பெயர் நாடுகளில் இலங்கை அரசால் செல்வி துவாரகாக்கு எதிராக இயக்கப்படும் நபர்கள் யார்.வெளியான அதிர்ச்சி தகவல்.

புலம்பெயர் நாடுகளுக்கு சென்று அங்குள்ள மக்களை கூறுபோட்டு குழப்பி,போலி அமைப்புகளை உருவாக்கி, தாயக மக்களையும்,அரசியல் வாதிகளையும் கூறுபோட்டு புலம்பெயர் மக்களின் நிதிகளை கொள்ளையடித்துக்கொண்டு,சிங்கள தலைவர்களுக்கு தங்களை நம்ப வைப்பதற்காக மேதகு அவர்கள் வீரமரணம் என்பதை அறிவித்து தங்களை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ள கமல் குணரத்ன , மிலிந்த மொனங்கொட போன்றவர்களின் பின்னணியில் இயக்கப்படும் நிதி மோசடி நபர்களை மக்கள் இனங்கண்டு விழிப்படைய வேண்டும் இது இறுதிக்கட்ட காலத்தின் கட்டளையாகும்.

உயிரோடு உள்ள எங்கள் தலைவனை சிங்கள படைகள் கொன்றுவிட்டார்கள் என்பதை அறிவித்து எமது விடுதலைப்போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க எதிர்வரும் மே 18 அன்று சிங்கள அரசின் எஜமான்கள் சிலர் புலம்பெயர் நாடுகளில் திட்டம் தீட்டிவருகின்றனர்.
வெடி புலவர்

தாயக விடுதலைச் செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள போராளிகள் மீது பலவேறுவிதமான விசமத்தனமான பிரச்சாரங்கள் தொடர்ந்தும் எதிரியால் கட்டவிழ்த்துவிடப்பட்டே வருகிறது.

ஆயுத விடுதலைப்போராட்டம் உச்சம்பெற்ற காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவ துணைக்ககுழுவான ஈபிடிபி என அழைக்கப்படும் ஒட்டுக்குழு, இதயவீணை எனும் வானொலி ஊடாக
விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும் மிகவும் கீழ்த்தரமான வசைபாடல்களையும், உண்மைக்குப் புறம்பான கட்டுக்கதைகளையும் பரப்பிவந்ததை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திலிருந்து தமிழ் மக்களை அந்நியப்படுத்துவதற்காக எதிரி கையாண்ட பிரச்சார யுக்தியே இது. ஆனாலும் ‘விழிப்புதான் விடுதலைக்கு முதற்படி”எனும் எமது தேசியத்தலைவரின் தத்துவார்த்த கருத்துக்கேற்ப விழிப்படைந்த எமது மக்கள் இதயவீணை எனும் ஈபிடிபி இன் கோழைத்தனமான ஊதுகுழல் வானொலி மூலம் பரப்பப்பட்டுவந்த விசமத்தனமான பிரச்சாரங்களை முறியடித்திருந்தனர்.

2009 மே 18 ஆயுத மௌனப்பிற்கு பின்னர் தற்போது இதயவீணை போன்ற பாணியில் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் மகள் மதிப்புக்குரிய செல்வி துவாரகா பிரபாகரன் அவர்களுக்கு எதிராக இலங்கை இராணுவத்தின் முகவர்களான லண்டன் வெடிப்புலவர், சுவிட்சர்லாந்து Soori Sinnathurai (அறிவுமணி), உள்ளிட்ட கயவர்கள் போலி கதைகளை கட்டவிழ்த்து வருகின்றனர்.
Soori sinnathurai
அறிவுமணி

2009 பின்னர் சில போலிப்புலிகள் சமூக வலைத்தளங்களில் தங்களை அடையாளப்படுத்த முனைந்து வருகின்றனர். உண்மையாகவும் , நேர்மையாகவும் தேசிய தலைவருக்கு விசுவாசமாக இருந்தவர்கள் களத்தில் மடிந்தும்,எஞ்சியவர்கள் தலைவனையும்,தலைவனின் குடும்பத்தையும் ஆழமாக நேசித்தும் எமது விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவாக புலத்திலும்,தாயகத்திலும் தங்கை துவாரகாவின் வழிநடத்தலில் செயற்பட தொடங்கிவிட்டார்கள்.

அவர்கள் மீது எதிரியின் முகவர்களால் சமூகவலைத்தளங்கள் ஊடாக அதிகரித்த தாக்கம் ஒவ்வொரு தனிப்பட்டவர்களையும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ள இக்காலகட்டத்தில் செய்திகள் மற்றும் தகவல் பரிமாற்றங்கள் வேகமாக கடத்தப்பட்டுவிடுகின்றன.

எதிரியானவன் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும்,விடுதலைச் செயற்பாடுகள் தொடர்பாகவும் உண்மைக்குப் புறம்பாக வதந்திகளைப் தனது அடியாக்கள் ஊடக பரப்பி மக்களை குழப்பமடையச் செய்ய முயன்று வருகிறான்.

சமூக ஊடகங்கள் ஊடாக ஒரு பொய்யான செய்தி எந்தளவுக்கு
மக்களைச் சென்றடைகிறதோ அந்தளவுக்கு அதன் உண்மைத் தன்மையை விரைவாக கண்டறியவும் அதே சமூக ஊடகங்களால் முடியும் என்பதனை எதிரி கணிக்கத் தவறிவிட்டான்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை, அதன் நியாயத்தன்மையை வலுவிழக்கச் செய்யவும், சர்வதேச நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடைகளை நீடித்து எமது ‘தேசிய விடுதலைக்கான போராட்டத்தை’ பயங்கரவாதப் போராட்டமாக சித்தரிப்பதற்கும், விடுதலைப் புலிகளின் போராளிகள் பற்றிய மக்கள் கொண்டிருக்கும் நல்லெண்ணங்களை குறிப்பிட்ட புனர்வாழ்வு அழிக்கப்பட்ட போராளிகளை பயன் படுத்தி சிதைத்து மக்களின் மனங்களில் வெறுப்புணர்வை ஏற்படுத்தவும்,மக்களை விடுதலைச் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கச் செய்வதற்குமே எதிரி பல துரோகிகளை உருவாக்கி கூலிப்படையாக இப்பிரச்சார நடவடிக்கையை செய்து வருகிறான்.

சிலர் திட்டமிட்டே இந்தச் சூழ்ச்சிக்கு புலம்பெயர் நாடுகளிலும்,தாயகத்திலும் ஆணிவேராயிருந்தார்கள் அவர்களில் முக்கியமானவர்கள் தயாபரன்.புலவர்,அறிவுமணி,ஜெயாத்தன்,இளங்குட்டுவன்,வரதன்,பொன்மலை,பாலா மாஸ்டர்,வீரமணி,நிமலன்,போன்றோர் எடுத்த எல்லா முயற்சிகளிலும் தோற்றுப்போனவர்கள்.

இந்த போலிகளை இனங்காணப்பட்டு உண்மை வென்றது. இதனால் நிலைகுலைந்த தேசவிரோதிகள் வக்கியில்லாமல் முகநூல் ஊடாக மோதி தோற்றுப்போனவர்கள்.

தமது பொய் பித்தலாட்டங்களை மக்கள் எளிதில் நம்பிவிட மாட்டார்கள் என்பதை நன்கறிந்த தேசவிரோதிகள் பலர் எதிரிகாலில் ஏறி நின்று செருப்பு ஆகிவிட்டனர்.

அந்த போலி நபர்கள் தங்கை துவாரகா அவர்களுக்கு எதிராக பல்வேறுபட்ட வதந்திகளைப் பரப்பிவிட படாதபாடு படுகின்றனர்.

இந்த நபர்கள் தங்களை போராளிகள்,தளபதிகள்,கட்டளைத்தளபதிகள், என தங்களுக்கு தாங்களே நிலைகளை வழங்கிக்கொண்டு போலியாக செயற்படும் கூட்டம் 15 ஆண்டுகளுக்குள் ஒரு போராளியை மக்களுக்கு முன்னால் நிறுத்த முடியவில்லை என்றால் இவர்கள் யார் என்பதை மக்கள் இனங்கண்டு விழிப்புடன் செயற்படவேண்டும்..

போலிகளை நிராகரிப்போம்.

தமிழன்