கொரோனாவுக்காக இயந்திர எண்ணெய்களை அருந்தக் கூடாது-ரணில் விக்ரமசிங்க

கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்தும் என உறுதிப்படுத்தப்படாத மருந்துகள் தொடர்பாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் கருத்து வெளியிடக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பியகமவில் நேற்று நடைபெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

குறைந்தது அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் அனுமதியுடன் கூடிய மருந்துகளையே பயன்படுத்த வேண்டும்.

அவ்வாறு இன்றி இயந்திரங்களுக்கு பயன்படுத்தும் எண்ணெய்களை அருந்தக் கூடாது.

இதனால் இறுதியில் ஏற்படும் விளைவுகளை எண்ணிப் பார்க்க முடியாது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.